திருச்செந்தூர் சன்னதி தெரு பாணர் மடம் முன்பு நடைமேடை உடைக்கப்பட்டு ஜல்லிக்கற்கள் பாதை முழுவதும் நடைமேடையை மறித்து போடப்பட்டுள்ளது. பல மாதங்களாக இந்த நிலை உள்ளது. இதனால் திருவிழா சமயத்தில் நடைமேடையில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையில் அடிக்கடி வாகனங்கள் செல்வதால் பள்ளி மாணவ-மாணவிகள் இந்த நடைமேடையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, நடைமேடை ஆக்கிரமிப்பை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.