பூட்டியே கிடக்கும் மருத்துவமனை

Update: 2022-07-11 16:01 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பழைய பஸ் நிலையம் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆஸ்பத்திரிக்கு 2 ஆண்டுகளாக மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என யாரும் நியமிக்கப்படாததால் ஆஸ்பத்திரி பூட்டியே கிடக்கிறது. பொதுமக்கள் நலன்கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ஆஸ்பத்திரியை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 

மேலும் செய்திகள்