பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் கிராமத்தில் சுமார் 5,000 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மிக முக்கியமாக இப்பகுதியைச் சார்ந்த பெரும்பாலானோர் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில் இந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் சுமார் 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து வாகனங்கள் வர வேண்டி உள்ளது. இதனால் தீயை குறித்த நேரத்தில் அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாடாலூரில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.