பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் மற்றும் ஆலத்தூரில் செயல்பட்டு வரும் உரங்கள் மற்றும் மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.