பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் அருகே உள்ள விஜய கோபாலபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று பகுதியைச் சேர்ந்த மாணவ -மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளி கட்டிடத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இந்த தொடக்கப்பள்ளி வளாகத்தில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.