பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

Update: 2022-09-04 13:00 GMT

மயிலாடுதுறை ஒன்றியம் நீடூர் ஊராட்சி மணல்மேடு மெயின்ரோடு கணபதி ஆறு அருகே சாலையோரத்தில் பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலையில் நிற்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், பலத்த காற்று வீசும் போது மரத்தின் கிளைகள் உடைந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பட்டுபோன நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்