ராமநாதபுரம் நகரில் விநாயகர் சிலைகளை கரைக்க வசதியாக நகருக்குள் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதன் காரணமாக மழலையர் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பள்ளிகளில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பள்ளிக்கூட வாகனங்கள் வழக்கமான பாதையில் பயணிக்க முடியாமல் சிரமப்பட்டனர். எனவே, இனிவரும் காலங்களில் இத்தகைய சிரமத்தை தவிர்க்க சிலைகளை கரைக்க உள்ள நாளன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.