குரங்குகள் தொல்லை; பயணிகள் அவதி

Update: 2022-09-02 14:24 GMT

மயிலாடுதுறை மாவட்டம் ரெயில்நிலையம் பகுதியில் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை ரெயில் பயணிகளின் உடைமைகளையும், அவர்கள் கொண்டுவரும் உணவு பொருட்களையும் எடுத்து செல்கின்றன. இதன்காரணமாக பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிவருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் தூக்கி செல்கின்றன. அதுமட்டுமின்றி சாலையில் செல்லும் சிறுவர்-சிறுமிகளையும் துரத்தி செல்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்