ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பல பகுதிகளில் பாலிதீன் கப், காலி தண்ணீர் பாட்டில்கள், பழ கழிவுகள், மீதமான உணவை பலர் வீசிச்செல்கின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும்.