கூடலூர் நகரில் குரங்குகள் கூட்டமாக வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அவை உணவு பொருட்களை எடுத்து செல்கிறது. இதை தடுக்க முற்படும்போது பொதுமக்களை தாக்க வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது தவிர குரங்குகளால் நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.