புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். ஆனால் அங்கன்வாடிகளில் போதிய பணியாளர்கள் இல்லாமல் ஒரே பணியாளரே அனைத்து அங்கன்வாடிகளையும் கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.