புதுக்கோட்டை மாவட்டம், கோவனூர் ஊராட்சி, மேக்கினிப்பட்டி ஆதிதிராவிடர் நல குடியிருப்பு பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட அடிபம்பு ஒன்று நீண்ட நாட்களாக பயனற்று கிடக்கிறது. மக்கள் இதைப் பயன்படுத்தாததால் அடிபம்பை சுற்றிலும் புல் மற்றும் செடிகள் முளைத்துள்ளன. இதனால் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அடிபம்பை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.