புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்களையும், கால்நடைகளையும் கடிக்க வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.