கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மாக்கமூலாவில் பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விட்டது. மீதமுள்ள பகுதி எந்த நேரத்திலும் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. இதை அறியாது, இக்கட்டிடத்தில் மாணவ-மாணவிகள் காலை, மாலை நேரத்தில் நின்று செல்கின்றனர். எனவே அசம்பாவித நிகழ்வுகள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் புதிய நிழற்குடை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.