தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் திருச்செந்தூர் முதல் சந்தி தெருவில் சாலை பலமாதங்களாக குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதை உடனடியாக சரிசெய்து, பேவர்பிளாக் கற்கள் பதிக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் பேவர் பிளாக் கற்கள் பதித்து உள்ளனர். எனவே கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.
