நாய்கள் தொல்லை

Update: 2022-08-31 17:35 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையையொட்டி உள்ள பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களில் பலர் அதையொட்டி உள்ள மீன் கடைகளில் பொரித்த மீன்களை வாங்கி கொண்டு பூங்காவிற்கு சென்று சாப்பிடுகின்றனர். இதனால் பூங்காவில் தெரு நாய்கள் அதிகளவு சுற்றி வருகின்றன. சில நேரங்களில் தெருநாய்கள் அங்கு ஓடி விளையாடும் குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகளை கடிப்பதற்கு துரத்துகின்றன. அப்போது சிலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்