பாலத்தில் மெகா பள்ளம்

Update: 2022-08-31 14:18 GMT

திருச்சி மாவட்டம்,திருவெறும்பூர்அருகே கீழ குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தமாடிப்பட்டி மேல தெருவில் மழை நீர் வடிகால் வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது. தற்போது பாலம் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதி கிராம பகுதி என்பதால் கால்நடைகள் அதிகமாக இருப்பதால் கால்நடைகள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்