சோதனை சாவடி வேண்டும்

Update: 2022-08-30 14:26 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலை மற்றும் காடுவெட்டி அருகே உள்ள பகுதி சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி வழிப்பறி நடைபெறுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்களை மர்மநபர்கள் வழிமறித்து பணம், நகைகளை பறித்து செல்கின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சோதனை சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்