திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவரனூர் கிராமத்தில் சீரமைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆன பின்பும் கிராம நிர்வாக அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால் அரசின் நலத்திட்ட உதவிகளை கேட்டு மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து பூட்டிக் கிடந்த கிராம நிர்வாக அலுவலகத்தை அதிகாரிகள் திறந்து பணிகளை தொடங்கினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.