கோத்தகிரி பகுதியில் கழுத்தில் சுருக்கு கம்பி மற்றும் பெல்ட் இறுக்கி பலத்த காயத்துடன் கடந்த சில வாரங்களாக பரிதாபமாக தெருநாய் ஒன்று சுற்றித்திரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அந்த தெருநாயின் உடல் நிலை மோசமாகி வருகிறது. எனவே அதன் கழுத்தில் உள்ள சுருக்கு கம்பி மற்றும் பெல்ட் ஆகியவற்றை உடனடியாக அகற்றி காயத்துக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.