வந்தவாசி நகர் முழுவதும் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. குரங்குகள் நடமாட்டத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சன்னதி தெரு, நீலகண்டன் தெரு, மீனவர் தெரு, போன்ற பல தெருக்களில் குரங்குகள் தினமும் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. குரங்குகள் வரும்போது குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் பால் பாக்கெட், தின்பண்டங்கள் வாங்கி சென்றால் அதை பிடுங்கி செல்கின்றன. சில நேரங்களில் கடித்து விடும் சம்பவமும் நடக்கின்றன. இதனால், குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும்.
-சண்முகம் முருகானந்தம், வந்தவாசி.