கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பள்ளப்பட்டி பிரிவு இந்திராநகர் அருகில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. திண்டுக்கல்லில் இருந்து அரவக்குறிச்சி வழியாக கரூர் செல்லும் பஸ்கள் பள்ளப்பட்டி பிரிவு வழியாக திரும்பி செல்கிறது. இப்பகுதி பொதுமக்களும், குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகளும் அதிகமாக வந்து செல்லும் பகுதியாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பள்ளப்பட்டி பிரிவு சாலை திரும்பும்போது தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. இந்த விபத்துகளை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் பள்ளப்பட்டி பிரிவு இந்திராநகர் அருகில் மேம்பாலம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.