ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் ஏராளமான கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் சுகாதார நிலையத்தில் இடபற்றாக்குறை, மருத்துவர்களின் பற்றாக்குறையால் நீண்ட நேரம் காத்திருந்து மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. சரியான கழிப்பறை, வெளியில் காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஒழுங்கான நிழற்குடை இல்லை. ஒரே நேரத்தில் அனைவரையும் உள்ளே அனுமதிப்பதால் அவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.