சென்னை திருவான்மியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பூங்கா பகுதியை ஒட்டி பக்கிங்காம் கால்வாய் இருக்கிறது. இதில் கடந்த சில நாட்களாக ஆகாயத்தாமரை அதிகளவு காணப்படுகிறது. இதனால் நீரோட்டம் பாதிக்கப்படுவதுடன் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து ஆகாயதாமரையை அகற்றும் பணியை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.