சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பஸ் நிறுத்தத்தில் நிழற் குடை இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பஸ் நிறுத்தத்தில் காத்திருந்து பஸ் ஏறும் பயணிகள் வெயிலில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும் மழை காலங்களில் அவர்கள் படும் சிரமங்கள் அதிகமாக உள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.