சென்னை ஐகோர்ட்டில் இருந்து மெரினா, அடையாறு, கிண்டி, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி வரை இயக்கப்பட்ட மாநகர பஸ் (தடம் எண்- பி.பி.21) தற்போது இயக்கப்படுவது கிடையாது. அதேபோல மந்தைவெளி, அடையாறு, கிண்டி, பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு வரை இயக்கப்பட்ட 577 என்ற மாநகர பஸ்சும் இயக்கப்படாமல் இருக்கிறது. இந்த பஸ்கள் இயக்கப்பட்டால் பயணிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.