சென்னை மடிப்பாக்கம் ராஜாஜி நகர் 3-வது குறுக்கு தெருவில் மழைநீர் வடிகால்வாயில் உடைப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் உருவாகி இருக்கிறது. இந்த பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் பலர் விபத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். எனவே இனியும் விபத்துகள் அரங்கேறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?