சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 9-வது தெருவில் உள்ள பெயர் பலகையில் தெரு பெயரே தெரியாத வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அத்தெருவில் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விலாசம் தெரியாமல் அலைய வேண்டியுள்ளது. அதேபோல் கொரியர் கொண்டு வரும் நபர்களும் சிரம்மத்துக்குள்ளாகிறார்கள். பெயர் பலகையையில் உள்ள சுவரொட்டிகள் அகற்றபடுவதோடு இனிமேல் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடாதவாறு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.