சேலம் மாநகராட்சிக்குட்பட்ட குகை சிவனார் 3வது தெருவில் 20 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த தெருநாய்கள் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் நடந்து செல்பவர்களை குரைப்பதால் கடும் அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருநாய்களை பிடித்து செல்வதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.