திருநாவலூர் அருகே செ.குச்சிபாளையம் கிராமத்தில் வடிகால் வாய்க்கால் வசதி அமைத்து கொடுக்கப்படவில்லை. இதனால் மழைநீர் மற்றும் கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு வடிகால் வாய்க்கால் வசதி அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.