கும்பாபிஷேகம் நடத்தப்படுமா?

Update: 2022-08-27 13:12 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில் சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்