நீலகிரி மாவட்டத்துக்குள் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வந்தால், பறிமுதல் செய்து சேகரிக்க மையங்கள் செயல்பட்டு வந்தது. தற்போது ஊழியர்கள் போதியளவில் நியமிக்கப்படாததால், பெரும்பாலான மையங்கள் மூடி கிடக்கிறது. இதனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வரும் சுற்றுலா பயணிகள், வனப்பகுதிகளிலும், சாலையோரங்களிலும் வீசியெறியகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும்.