திருச்செந்தூர் அமலிநகரில் சமீப காலமாக நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் சென்றால் பின்னால் ஓடிவந்து கடிக்க வருகிறது. தெருவில் குழந்தைகள் விளையாடினாலும் கடிக்க வருகிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?