குன்னூர் அருகே வெள்ளாளபுரம் பகுதியில் செங்குத்தான இடத்தில் இருந்து பொதுமக்கள் கீழே ஏறி, இறங்க வசதியாக படிக்கட்டுகளுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த நடைபாதை சேதம் அடைந்து காணப்படுகிறது. குறிப்பாக அதில் உள்ள படிக்கட்டுகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அதில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை காணப்படுகிறது. எனவே அந்த நடைபாதையை சீரமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.