உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்த நாட்டிலிருந்து உடையானந்தல் வழியாக திருநாவலூர் செல்லும் சாலை நடுவே உள்ள கண்வாய் பாலம் உடைந்து கிடக்கிறது. இரவு நேரத்தில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பாலம் உடைப்பில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இந்த பாலம் கட்டி இரண்டு வருடம் ஆன நிலையில் உடைந்து விட்டதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை தவிர்க்க பாலத்தை சீரமைக்க வேண்டும்.