தரமில்லாமல் கட்டப்பட்ட வாய்க்கால் உடைந்தது

Update: 2022-08-27 09:51 GMT
திருநாவலூர் ஒன்றியம் வேலூர் ஊராட்சிக்குட்பட்ட அயன்வேலூர் கிராமத்தில் உள்ள கோவிந்தராஜாபட்டினம் செல்லும் சாலையில் கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் உடைந்து கிடக்கிறது. வாய்க்கால் கட்டி 3 மாதத்திலேயே இடிந்து விட்டது. தரமில்லாமல் வாய்க்கால் கட்டப்பட்டதால் தான் விரைவிலேயே வாய்க்கால் உடைந்துவிட்டதால் அரசு பணம் வீணாகி உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்