டாக்டர்கள் நியமிக்கப்படுவார்களா?

Update: 2022-08-26 14:46 GMT


தரங்கம்பாடி தாலுகா பகுதியில் தரங்கம்பாடி மற்றும் பொறையாறு பகுதியில் உள்ள ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையம் (மருத்துவமனைகளில்) இரவு நேர பணிக்கு டாக்டர்கள் இல்லை. இதனால், அவசர சிகிச்சை மற்றும் முதலுதவி செய்வதற்கு கூட மருத்துவர் இல்லாத காரணத்தால் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் நோயாளிகள் , காரைக்கால் அல்லது மயிலாடுதுறை செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் ஒரு சில நேரங்களில் உயிர் சேதம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொறையாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இந்துமதி, கொட்டுப்பாளையம்.

மேலும் செய்திகள்