திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புகளால் அல்லல்படுகிறது. இதனால் குளம், குட்டைகளுக்கு செல்லும் நீர் தடை பட்டு குளங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு விடுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. மறுபுறம் மழை காலங்களில் தண்ணீர் முறையாக செல்ல முடியாததால் சாகுபடி பயிர்கள் சேதமாகிறது அல்லது வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து விடுகிறது. பாப்பகுளம் ஊராட்சி காசிலிங்கம் பாளையம் அருகில. கோபி சாலையில் நீர் வழி பாதையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை பாருங்கள். இவற்றை உடனே அகற்ற வேண்டும்.