கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் சாலையோரம் பாழடைந்த கிணறு உள்ளது. இதில் ஆடு உள்ளிட்ட கால்நடைகள் அடிக்கடி தவறி விழுந்து விடுகிறது. அதே பகுதியில் குழந்தைகள் விளையாடுவதால் பாழடைந்த கிணற்றால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன் பாழடைந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.