கூடலூரில் சுற்றுலா தகவல் மைய அலுவலகம் நீண்ட காலமாக மூடி கிடக்கிறது. மேலும் அதை சுற்றி புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கூடலூருக்கு வரும் சுற்றுலா பயணிகள், குறிப்பிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் புதர்களை வெட்டி அகற்றி தகவல் மையம் மீண்டும் செயல்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.