புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்ல வாகன வசதி உள்ளது. ஆனால் இந்த வாகனங்கள் இயக்கப்படாமல் நோணாங்குப்பம் படகு குழாமில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பராமரிப்பு இன்றி வீணாகி வருகிறது. இந்த வாகனங்களை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?