ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-23 10:49 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதி ஒன்றியம் வேட்டங்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி அருகே குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன. இதன்காரணமாக குளம் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இதனால் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆகாயத்தாமரை செடிகள் அழுகி குளத்தின் நீரில் கிடப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்