குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2026-05-10 16:39 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கடலாடி புதிய காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு செல்லும் சாலையோரம் குப்பைகள் கிடக்கிறது. குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற வேண்டும் என பலமுறை கடலாடி ஊராட்சி செயலாளரிடம் கூறியும் குப்பைகளை அகற்றவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றுவார்களா?

-வசந்தி முருகன், கடலாடி. 

மேலும் செய்திகள்