வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள பஸ் பயணிகள் நிழற்கூடம் அருகே குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இரவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நிழற்கூடத்தில் பயணிகள் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து நிழற்கூடம் அருகில் கிடக்கும் குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும்.
-ராஜேந்திரன், அப்துல்லாபுரம்.