திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா தேவராயன்பாளையம் கிராமத்துக்கு உட்பட்ட பெருமபாளையம் கிராமத்தில் பல நாட்களாக குப்பைகளை அகற்றாமல் குவித்து வைத்துள்ளனர். கிராமத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளாமல் புறக்கணிக்கப்படுகிறது. இதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குவித்து வைத்துள்ள குப்பைகளை அகற்ற உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
-எம்.அய்யப்பன், சமூக ஆர்வலர், தென்மாதிமங்கலம்.