வேலூர் லாங்குபஜாரில் (கிருபானந்தவாரியார் வீதி) இணைக்கப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு வசதியாக மாநகராட்சி சார்பில் தெரு அகலப்படுத்தப்பட்டது. குப்பைகளை தெருவில் கொட்டி வைப்பதும் தடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலூர் பழைய பஸ் நிலையம், நேதாஜி மார்க்கெட் பகுதியில் காய்கறி கழிவுகள், ஓட்டல்களில் இருந்து சேகரிக்கப்படும் உணவு கழிவுகள் அனைத்தும் அகற்றப்படுவதற்காக டிராக்டர்கள், லாரிகளில் ஏற்றப்படுகிறது. ஆனால் உடனடியாக குப்பைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் டிராக்டர்களை குப்பை லோடுடன் லாங்குபஜாரில் நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஜித், வேலூர்.