சுகாதார சீர்கேடு

Update: 2026-08-23 10:18 GMT

தேங்காப்பட்டணம் பகுதியில் ஆற்றுபள்ளி தெரு உள்ளது. இந்த பகுதியில் இருந்து துறைமுகத்துக்கு செல்லும் பாதையில் சிலர் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியை பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத வகையில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றுவதுடன், எச்சரிக்கை பாதைகை வைத்து குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாஹா, தேங்காய்பட்டணம். 

மேலும் செய்திகள்