பல்லடம் உழவர் சந்தையில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. குப்பைகளை அகற்றாததால் சுகாதாரக்கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வருபவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்துக்்கு புகார் தெரிவித்தும் அவர்கள் குப்பைகளை அகற்ற முன்வரவில்லை. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடு்ப்பார்களா?
ராம்தாசன், பல்லடம்.