செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குப்பைக்கழிவுகள் அகற்றப்படாமல் சாலை ஓரமாக தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சியில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், செங்கம்.