சுகாதார சீர்கேடு

Update: 2026-08-23 13:03 GMT

திருத்தங்கல் பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றது. இந்த குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்படுகிறது. மேலும் இதில் இருந்து கொசு உற்பத்தி அதிகரிப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாய நிலை உள்ளது.. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதியில் கிடக்கும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்